ஆவின் பால் தட்டுபாடு எதிரொலி... சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் ஆஞ்சநேயர் வழிபாட்டில் அதிரடி மாற்றம்...!
தமிழ்நாட்டில் நிலவி வரும் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு எதிரொலியாக சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் உள்ள விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு சுமார் நூறு ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த வெண்ணை வழிப்பாடு நிறுத்தம்
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் உள்ள விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு சுமார் நூறு ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த வெண்ணை வழிப்பாடு நிறுத்தம்.
.ஐ.எஸ்.ஐ.முத்திரை பதித்த ஆவின் உட்பட மூன்று நிறுவனங்களின் வெண்ணை தினந்தோறும் 100 நூறு கிலோ வெண்ணை வழிப்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கடும் தட்டுப்பாட்டால் இரண்டு நாட்களாக வெண்ணை வழிப்பாடு நிறுத்தம். உலகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி.
குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள தாணுமாலையன் கோவிலில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் மிகவும் புகழ் பெற்றது.இங்கு ஆண்டு தோறும் நடைப்பெறும் ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு பல்லாயிரகணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயயரை தரிசிக்க வருகை தருவார்கள்.
இதையும் படிங்க: நிதி நெருக்கடியில் மின் வாரியம்!! ரூ.1.86 லட்சம் கோடி மெகா திட்டம்! தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தாமதம்?
இங்கு வரும் பக்தர்கள் ஆஞ்சநேயர் சாமிக்கு வெண்ணை சாத்தி வழிப்பாடு நடத்துவது நூற்றாண்டுகளாக நடைப்பெற்று வருகிறது. இதற்காக இந்து அறநிலைய துறை நிர்வாகம் சார்பாக ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஆவின் உட்பட மூன்று நிறுவனங்களிடம் இருந்து தினந்தோறும் நூறு கிலோ வெண்ணை வாங்கி வந்தார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தில் பால், வெண்ணை, நெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு நிலவி வரும் கடும் தட்டுப்பாடு காரணமாக ஆஞ்சநேயர் சாமிக்கு வெண்ணை சாத்துதலை கோவில் நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக திடீரென நிறுத்தி வைத்துள்ளார்கள்.
பக்தர்களுக்கும் ஆஞ்சநேயர் சாமிக்கு நேர்ச்சை செலுத்த வெண்ணை வழங்கப்படவில்லை.அதே நேரம் வெளியில் இருந்து வெண்ணை வாங்கி வந்து தங்கள் நேர்ச்சையை செலுத்தவும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொற்ப எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள்..! அறிவிப்பாணை திருத்தம்.. TTV தினகரன் வலியுறுத்தல்..!!