×
 

அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

திருச்செந்தூர் கோவில்  கடலானது கரையில் இருந்து  சுமார் 70 அடி தூரம் உள்வாங்கியது பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

திருச்செந்தூர் கோவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இந்த கோவிலை ஒட்டிய கடலில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள்.  கடலானது அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, போன்ற கனத்த நாளில் கடலானது உள்வாங்கியும் வெளியே சீற்றத்துடன் காணப்படும். இன்று அம்மாவாசை தினம் என்பதால் கடலானது உள்வாங்கி காணப்பட்டுள்ளது.

 கடற்கரை கரையில் அமர்ந்து இன்று அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்கள். கோயில் அருகில் உள்ள கடற்கரையானது சுமார் 70 அடி கரையிலிருந்து உள்வாங்கி காணப்பட்டது இதனால் அந்தப் பாறையில் பச்சை நிறம் காணப்பட்டது அதில் பக்தர்கள் நின்று நீராடி வருகிறார்கள் சிலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

 கடல் கரையானது சுமார் 5 அடி உயரத்தில் கரையானது கடல் அரிப்பு எடுத்து ஆழமாக காணப்பட்டுள்ளது. கோவில் செல்வ தீர்த்தம்  எதிர்ப்புறம் உள்ள இடத்தில் கடல் கரையில் இருந்து சுமார் 70 அடி தூரம் உள்வாங்கி. கோவில் கடலானது அவ்வப்பகுதி உள்வாங்குவதும் கடலில் வெளியேறுவதும் நிகழ்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: #BREAKING: விவசாயிகளுக்கு குட் நியூஸ்... மரங்களை வெட்ட புதிய விதி..! அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

இந்நிலையில் இன்று காலை முதல் கடல் நீரானது சுமார் 70 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது.  கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும்  பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இருந்த போதிலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள்  எந்தவித அச்சமும் இன்றி கடலில் நீராடி வருகின்றனர்.

பக்தர்கள்  கடலில் விளையாடி குளித்து  வருகின்றனர். கடல் உள்வாங்கி இருந்ததால் பக்தர்கள் உள்ளே சென்று பாறை மீது நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சில பக்தர்கள் பாறைக்கு இடையில் உள்ள சிற்பிகளை சேகரித்து வந்தனர். கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பக்தர்களுக்கு ஆழமான பகுதியில் சென்று குளிக்க வேண்டாம் என்று பக்தர்களுக்கு  அறிவுறுத்தி வருகிறார்கள்.
 

இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்..! வேளாண் பட்ஜெட்... இளைஞர்களை ஊக்குவிக்க மானியம்...! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share