சுதீஷுக்கு அந்த அருகதை இல்லையா? பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி..!!
L.K. சுதீஷுக்கு சீட் கொடுக்கப்பட்டது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் கொடுத்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்தது தமிழக அரசியலில் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் வெற்றிகளில் பின்னடைவைச் சந்தித்து வந்த தேமுதிக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்தது.
இந்தக் கூட்டணியின் முதல் கணிசமான பலனாக, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் தேமுதிகவின் பொருளாளரான எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் தற்போது எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையை எட்டியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 3 அன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷுக்கும் இடையே கையெழுத்தானது. இன்று அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், L.K. சுதிஷுக்கு சீட் கொடுத்தது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினருக்கு சீட் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு பிரேமலதா பதில் கொடுத்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க... டேரக்ட்டா பிரேமலதாவை சீண்டிய விந்தியா...!
கட்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து சுதீஷ் பாடுபடவில்லையா என்று கேள்வி எழுப்பினார். அவர் உழைக்கவில்லையா என்றும் கேப்டனுக்கும் எனக்கும் துணை நிற்கும் அவருக்கு சீட் கொடுக்க கூடாதா எனவும் கேட்டார். அந்த எம்.பி பதவியில் அமர அவருக்கு அருகதை இல்லையா என்றும் உரிமை இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். தேமுதிகவுக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் கேப்டன் ஆன்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். கேப்டன் ஆன்மா என்பது கடைக்கோடி தேமுதிக தொண்டர்கள்தான் என்றும் மொத்த தொண்டர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி கட்சியினரை சந்திக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு தடை! கடிவாளம் போட்ட பிரேமலதா! திமுக ஷாக்!!