ஜீன்ஸ், லெக்கின்ஸ் போடாதீங்க..! கடும் வெயிலால் அபாயம்..! மருத்துவர்கள் எச்சரிக்கை..!
கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் உள்ளிட்டவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் சுட்டெரித்து வரும் வெயில் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும் வெயில் வாட்டி வதைக்கிறது காலை 8 மணி அளவிலே வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுவதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பணிக்கு செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் வெப்ப காற்றின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் வெகுவாக குறைந்து வருவதால் நகர் பகுதி வெறிச்சோடிக் காணபடுகிறது.. கடும் வெயில் சுட்டெரிப்பதை சமாளிக்க குடையுடன் பலர் உலா வருகின்றர்.
வெயிலை சமாளிக்க முடியாமல் குளிர்பானங்களை தேடி மக்கள் செல்வதால் மாவட்டத்தில் குளிர்பான கடைகள் , நொங்கு வெள்ளரி தர்பூசணி, மோர், கூழ்,இளநீர்கடைகள் புதிது புதிதாக திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடக்கிறது . தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற 4-ந்தேதி 'அக்னி நட்சத்திரம்' என்ற கத்திரி வெயில் தொடங்கி வருகிற இன்று வரை இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளதால் . வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்வெயிலை எதிர்கொள்வது குறித்து டாக்டர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளில் வெளிர் நிற ஆடைகளை உடுத்துவதுடன், உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிய கூடாது. வெயில் நேரத்தில் வெளியே சென்றால் குடை எடுத்து செல்வதுடன், வெயிலில் வேலை பார்க்கும் நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும். வெயில் பட வாய்ப்புள்ள முகம், கை, கழுத்து ஆகிய இடங்களில் 'சன் ஸ்க்ரீன் லோசன்' தடவிக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: "HEAT STROKE"..! வெப்ப அலை முன்னெச்சரிக்கை..! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!
முடிந்த வரை வெயில் படாமல் பார்த்துக்கொள்வதுடன், நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டரும், பெண்கள் 3 லிட்டரும் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல், பெண்கள் 'ஜீன்ஸ், லெக்கின்ஸ்' உள்ளிட்ட உடலை இறுக்கும் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏ.சி. அறையில் இருப்பவர்கள் நீர் பருகாவிட்டால் உடல் சோர்வு ஏற்படும். நீச்சல் குளங்களுக்கு செல்லும்போதும் தண்ணீர் பருக வேண்டும் இன்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கடும் வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்புள்ளது. உடல் வெப்பம் உயர்ந்து, உடல் தன்னைத்தானே குளிர்விக்கும் திறனை இழக்கும் போது உயிருக்கு ஆபத்தான அவசரநிலை ஏற்படுகிறது. இது மூளை, இதயம் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கும். என்றும் அதிக காய்ச்சல், குழப்பம், எரிச்சல், பேசுவதில் தடுமாற்றம், வலிப்பு, கோமா, தலைவலி, விரைவான இதயத் துடிப்பு, மற்றும் வாந்தி. போன்ற அறிகுறிகள் தோன்றும் என்றார். இதில் பாதிக்கப்பட்டவரை நிழலான இடத்திற்கு மாற்றி, குளிர்ந்த நீர் தெளித்து, பனிக்கட்டி பைகளை அக்குள் அல்லது கழுத்துப் பகுதியில் வைத்து, காற்றோட்டம் ஏற்படுத்தி உடலை குளிர்வித்து மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கோடை காலத்தை முன்னிட்டு 18,000 சிறப்பு ரயில்கள்..! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!