×
 

விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

நடிகர்களை பின்தொடர்ந்து சென்று இளைஞர்கள் உயிரிழப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். விஜய் பரப்புரைக்கு செல்லும் போதெல்லாம் அவர்களது பிரசார வாகனத்தை இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மிகவும் நெருக்கமாக பின் தொடர்வதை அவர்கள் தொண்டர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். காவல்துறை தரப்பிலிருந்து ஒவ்வொரு முறை விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுக்கும் போது, அவரது வாகனத்தை யாரும் பின் தொடரக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் சேர்ந்தே அறிவுறுத்தி வருகின்றனர். 

சமீபத்தில் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே விஜய்யின் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்து அதிவேகமாக வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதில் விக்னேஷுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 19 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவர் விக்னேஷ், மார்ச் 24ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய போதும், இன்று வரை தொடர்ந்து தவெகவினர் விஜய் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்வதை நிறுத்தவில்லை. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இளைஞர்களுக்கு சிறப்பான சில அறிவுரைகளை வழங்கிச் சென்றார். 

இதையும் படிங்க: “தவறான அவதூறுகளை பரப்பக்கூடாதுன்னு...” - ரஜினி குறித்து ஆதவ் கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்..!!

நடிகர்களை பின்தொடர்ந்து சென்று இளைஞர்கள் உயிரிழப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்களின் பின்னால் சென்று கீழே விழுந்து காயம் அடைந்தால் உங்களுக்குத் தான் ஆபத்து. படிக்கின்ற இளைஞர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்; இல்லையென்றால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவர். குடிப்பழக்கம், கஞ்சா இதையெல்லாம் இளைஞர்கள் தொடக்கூடாது. போதை பழக்கம் உள்ள நண்பர்களிடம் இருந்து விலகி இருங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். 
 

இதையும் படிங்க: அன்புக்கு அடிபணிபவர் ரஜினி! அவரை மிரட்டி பணியவைக்க முடியாது! அமைச்சர் ரகுபதி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share