×
 

கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

தமிழக வெற்றி கழக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்று, இருமுறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கே.ஆர். பெரியகருப்பன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த முடிவு திமுகவின் பாரம்பரிய கோட்டையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்ற நிலையில், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்பு 30 வாக்குகள் முன்னிலையில் இருந்த பெரியகருப்பன், இறுதியில் ஒரு வாக்கால் தோற்றுப் போனது, தேர்தல் வரலாற்றில் அரிதான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

திருப்பத்தூர் தொகுதி திமுகவுக்கு நீண்டகாலமாக வலுவான கோட்டையாக இருந்து வந்தது. 2006 முதல் பெரியகருப்பன் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், இந்தத் தோல்வி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்தச் சூழலில், சென்னை செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் தொகுதி முடிவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையும் படிங்க: மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை..! ட்விஸ்ட்..! தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட் முக்கிய உத்தரவு..!!

இதைத்தொடர்ந்து பெரிய கருப்பன் வழக்கு தொடர்ந்தார். இதை எடுத்து தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது கடுமையான உத்தரவு என்றும் கொடூரமான உத்தரவு எனவும் தெரிவித்தது. உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: அதிகரித்த வாக்குப்பதிவு சதவீதம்..! பெருமையா இருக்கு..! உச்சநீதிமன்றம் பாராட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share