×
 

கவின் ஆணவப்படுகொலை! யார், யாருக்கு தொடர்பு? சுர்ஜித், சரவணனிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை..!

கவின் ஆணவ படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லையில் கவின்குமார் என்ற இளைஞர் காதல் விவகாரத்தின் காரணமாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நவீன காலத்திலும் சாதியை தூக்கி பிடித்து நடக்கும் இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

 மாற்று சாதியினரை காதலிப்பதே தவறு என்ற எண்ணத்தை திணிக்கும் விதமாக, பழி தீர்க்கும் விதமாக நடக்கும் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

சாதி என்ற போர்வையில் இருந்து மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாதிய ஆணவ படுகொலைகள் மீண்டும் பல்லாண்டுகள் நம்மை பின்னோக்கி தள்ளும் விதமாகவே உள்ளது. 

இதையும் படிங்க: காசி பாண்டியன் ஒரு கூலிப்படை தலைவன்... மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வரும் கவின் தந்தை...

நெல்லையில் கவின் குமார் என்ற இளைஞர் கைநிறைய சம்பாதித்தும், தாய் தந்தையர் அரசுப் பணிகளில் இருந்தும், மாற்று சாதிப் பெண்ணை காதலித்த காரணத்தால் பெண்ணின் சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கள் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அவரது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி போராடினர். கொலை செய்துவிட்டு சரணடைந்த சுர்ஜித் மீது குண்டாஸ் பாய்ந்தது. மேலும், சுபாஷினி தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கவின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.

வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அதிகாரிகள் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் காவலில் எடுத்து விசாரிக்க கேட்டு இருந்தனர். இந்த நிலையில், சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு சுர்ஜித் மற்றும் சரவணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா உள்ளிட்டவை தொடர்பாக தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கவினை கொலை செய்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்! கண்ணீர் விட்டு கதறிய சுர்ஜித்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share