×
 

சென்னையில் ஸ்விக்கி, ஜோமேட்டோ உணவு டெலிவரி ரத்து?... மொத்தமாக முடங்கும் அபாயம்...!

நாமக்கல் தாலுக்காவில் இன்று முதல் Zomoto, Swiggy ஆன்லைன் நிறுவனங்களின் ஆர்டர்களை எடுக்க போவதில்லை என நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவனங்கள் உணவகங்களிடமிருந்து பெறும் கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும்; இல்லாவிட்டால் உணவு வழங்கப்படாது என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. உணவகங்களிடம் இருந்து சராசரியாக 30% வரை ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவனங்கள் கமிஷன் வசூலிப்பதாக தெரிகிறது. 

சற்று பெரிய உணவகமாக இருந்தால் விளம்பர கமிஷன் என்று கூறி 40% கூட கமிஷன் வசூலிப்பதாகத் தகவல். ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவனங்கள் மூலம் விற்பனையாகும் உணவுகளுக்கான தொகை ஒரு வாரம் கழித்தே உணவகங்களுக்கு வருவதாக ஓட்டல் உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். டெலிவரி நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கமிஷன் தொகை போக தாங்கள் பெறும் தொகையில் லாபமே இல்லை எனக் கூறும் உணவக உரிமையாளர்கள், நாமக்கல்லில் கமிஷன் தொகையை முறைப்படுத்தும் வரை டெலிவரி நிறுவனங்களுக்கு உணவு வழங்கப்படாது என இன்று முதல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: சித்திரவதை செஞ்சிருக்காங்க... சுயாதீன நடவடிக்கை எடுங்க! மனித உரிமைகள் ஆணையத்துக்கு நயினார் முக்கிய கோரிக்கை...

நாமக்கல்லைப் போலவே, சென்னையிலும் கமிஷன் தொகையை முறைப்படுத்தக் கோரி உணவக உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் கமிசன் தொகையை 35% லிருந்து 18% ஆக குறைக்க வேண்டும், மறைமுக கட்டணம், விளம்பர கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும், நிறுவன ஊழியர்களின் நடவடிக்கைகளை சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் இன்று முதல் திட்டமிட்டபடி ஸ்விக்கி, ஜோமேட்டோ நிறுவனங்களின் ஆர்டர்களை எடுக்காமல் புறக்கணிப்பு செய்வதாக நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. விரைவில் இதேபோல் சென்னையிலும் உணவகங்கள் ஆன்லைன் ஆர்டர்களை புறக்கணிக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share