எச்சரிக்கை..! அல்மாண்ட் கிட் சிரப் வாங்க கூடாது… தமிழக அரசு அதிரடி தடை..!
அல்மாண்ட் கிட் என்ற சிரப்- க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் அல்மாண்ட் கிட் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான சளி மற்றும் இருமல் சிரப்புக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. இது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நச்சு ரசாயனம் கலந்திருப்பதால் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவு.இந்த சிரப் பீகாரைச் சேர்ந்த Tridus Remedies என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
மருந்துப் பொருட்கள் இருந்தாலும், சமீபத்திய ஆய்வில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சு பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொழிற்சாலை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் விஷமான ரசாயனம். உடலில் சேர்ந்தால் சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல சேதம், கூடுதலாக உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, பொது நலன் கருதி உடனடியாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த சிரப்பை வாங்குதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் என அனைத்திடமும் இந்த பேட்சை உடனடியாக அகற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: FREE LAPTOP...! அந்த லிங்கை மட்டும் தொடாதீங்க..! தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!
ஏற்கெனவே வீடுகளில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தாமல், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தமிழகத்தில் மட்டுமல்ல, தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலும் இதே போன்ற தடை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் இதே போன்ற சில இருமல் சிரப் சம்பவங்கள் குழந்தைகள் உயிரிழப்புக்கு வழிவகுத்த நிலையில், அரசு இப்போது மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலயா.. நாளைக்கும் இருக்கு..!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!