×
 

தி. மலை தீபம்... கிரிவலப் பாதையில் வண்டியை இயக்கினால்.... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை...!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆன்மிக மையமாகத் திகழும் திருவண்ணாமலை, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஒரு அற்புதமான ஒளி விழாவை அணிவகுத்து நிற்கிறது. கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னோடு இணைத்து, இருளைக் கடந்து ஒளியின் பெருமையைப் பாடுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் என்றாலே மெய்சிலிர்க்கும். தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது அண்ணாமலையாருக்கு அரோகரா., உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் விண்ணை பிளக்கும்.

கார்த்திகை தீபத்தின் வரலாறு, புராணங்களின் ஆழமான கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழ் பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாத பௌர்ணமியன்று, கிருத்திகா நட்சத்திரத்துடன் இணைந்து நிகழும் இந்த விழா, பத்து நாட்கள் நீடிக்கும் பிரஹ்மோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு தீபத் திருவிழா கொண்டாட்டமாக டிசம்பர் 3 அன்று, மாலை 6:30 மணியளவில், திருவண்ணாமலையின் 2668 அடி உச்சியில் 30 அடி உயரமுள்ள பெரிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. 94 8785 1015 என்ற whatsapp உதவி என் மூலம் google map உதவியுடன் கார் பார்க்கிங் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தி.மலையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு..!! சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு டிசம்பர் இரண்டாம் தேதி காலை 8:00 மணி முதல் டிசம்பர் 5ஆம் தேதி காலை 6 மணி வரை திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக மற்றும் இலகர வாகனங்கள் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை விதிக்கப்பட்ட உள்ளது. அனுமதியின்றி வனப்பகுதியில் நடமாடவோ மலையில் ஏறவும் கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிவல பாதையில் மக்கள் கூட்டத்திற்கு இடையே வாகனங்களை இயற்றினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபம்... அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share