×
 

ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திக்க சென்றுள்ளது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, மே 10 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். அவரது கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியமைத்தது.

இது தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் இருமுனை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார். டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்த டெல்லி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இன்று மாலை 4:30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்திக்கிறார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

பிரதமர் மோடி - முதல்வர் விஜயின் சந்திப்பு சம்பிரதாயமாக இருக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். மாநில அரசு இணக்கமாக இருக்கும் என்ற சொல்வதுதான் ஆரோக்கியமான சூழல் என்றார். ஒரு விஜய் இன்னொரு விஜய் சந்திப்பதற்காக சென்றுள்ளார் என்றும் ஒரு வெற்றியாளர் இன்னொரு வெற்றியாளரை சந்திக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மத்திய, மாநில அரசின் நல்லுறவை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசை எதிர்க்கட்சியாகவே முந்தைய அரசு பார்த்ததாக தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share