பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நாளை காலை 9.30 மணிக்கு வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 (HSE +2) பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 08, வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து வரும் சூழலில், மாணவர்களின் உயர்கல்வி நலனைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டபடி முடிவுகள் வெளியாக உள்ளன.
மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்திப் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் (www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in) தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இணையதளம் தவிர, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது தங்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
2026 மார்ச் 02 முதல் மார்ச் 26 வரை நடந்த பொது தேர்வில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் அனைத்து விடைத்தாள்களும் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை!
நாளை முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் (Engineering, Arts & Science) தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Marksheets) மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வில் தோல்வியுற்ற அல்லது மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்குத் துணைத் தேர்வுகள் (Supplementary Exams) ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!