சத்தீஸ்கர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி... சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்...!
திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நாலு பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆறுகள் நிரம்பி வழிந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து, படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கருக்குச் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் வசித்து வந்த அவர்கள் திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த இவரது தம்பி திருமணத்திற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.
சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற அவர்களது கார் சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தை அடைந்த போது மழை வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அவரது வீடு இப்போது சோகமாக காட்சியளித்து வருகிறது. ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நான்கு பேரின் சடலங்களும் சொந்த ஊரான திருப்பத்தூருக்கு கொண்டு வரப்படுகிறது .அவரது உறவினர்கள் இதுகுறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். திருமணத்திற்கு சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் மக்க்ள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நானே முதல்வரை பார்த்தா அங்கிள்னு தான் கூப்பிடுவேன்… விஜய்க்கு கே.எஸ். ரவிக்குமார் சப்போர்ட்
இதையும் படிங்க: வர்த்தகப்போர் எதிரொலி! மோடியுடன் பின்லாந்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை!