×
 

தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்... எகிறும் எதிர்பார்ப்புகள்... வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டமன்ற தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டும் தாக்​கல்செய்ய முடி​யும்.

சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தமிழக அரசு சமீபத்தில் யாருமே எதிர்பாராத சம்பவத்தை செய்திருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்ததுடன், அதிரடியாக 5,000 ரூபாய் தொகுப்பை ஒரே நாளில் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவித்து ஆச்சரியப்படுத்தினார். 

இந்த சூழலில் தான் நாளைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்த ஆண்டு முதல் கூட்​டம் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஜனவரி 24ம் தேதி பதில் அளித்​தார். இதையடுத்​து, மறு​தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. 

தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டமன்ற தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டும் தாக்​கல்செய்ய முடி​யும். பின்​னர்​, ஆட்​சிஅமைக்​கும்​ கட்​சி பட்​ஜெட்​டை​தாக்​கல்​ செய்​யும்இதுதொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அடுத்த கூட்டத்தொடர் கூடுகிறது. அன்றைய தினம் 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் எனக்கூறியிருந்தார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படவுள்ளன.

இதையும் படிங்க: நாளை கூடுகிறது தமிழக சட்டசபை..!! உரை நிகழ்த்துவாரா ஆளுநர்..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

பிப்​ரவரி 20ம் தேதி வரை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளது. 

மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால், சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் திமுகவில் இருந்து கைநழுவக்கூடும் என சில கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் சிறுபான்மையினரையும், இளைஞர்களையும் கவரக்கூடிய அறிவிப்புகளை இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே அதிர்ச்சி... நடுக்கடலில் 25 மீனவர்கள் சுற்றி வளைத்து கைது... இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share