×
 

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர்! நயினார் விளாசல்!

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் நெல்லையில் நடைபெற்ற இரட்டைக் கொலை தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இப்போது கோவை சிங்காநல்லூர் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவமும், விருதுநகர் மாவட்டத்தில் திமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சிறுமி ஒருவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

“பட்டப்பகலில் பொதுவெளியில் யார் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம், தாக்கலாம், கொலை செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்ட அவர், தவெக ஆட்சியை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: 6 மாசம் எதுவும் கேட்கக் கூடாதுனு நினைக்கிறீர்களா? இல்லை! திமுகவின் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? ஸ்டாலின் கேள்வி!

“மாற்றம் வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு தினந்தோறும் உயிர்ப்பயத்தை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாதது” என்று தெரிவித்த நயினார் நாகேந்திரன், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், முந்தைய ஆட்சியில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதலமைச்சர் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share