×
 

நிரம்பாத நீர்த்தேக்கங்கள்! பருவமழை பெய்தும் பலனில்லை!! தமிழக நீர்வளத்துறை அப்செட்!

வடகிழக்கு பருவமழை கொட்டியும், 16 அணைகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டிஉள்ளன.

சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தை நனைத்துக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, கோவை, திருவள்ளூர் என பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால், அதிர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் வெறும் 16 அணைகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மொத்த கொள்ளளவு 224 TMC இருக்கும் இந்த அணைகளில் இப்போது 196 TMC நீர் மட்டுமே உள்ளது. அதாவது 87% மட்டுமே நிரம்பியுள்ளது.

நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்கிறது. அங்கு உள்ள அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையில் தான் அதிக நீர் வரும். வடகிழக்கு மழை சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளையும், சில சிறிய அணைகளையும் தான் அதிகம் நிரப்புகிறது” என்றார்.

முழு கொள்ளளவு எட்டிய 16 அணைகள்:

  • திருவள்ளூர்: புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை
  • தர்மபுரி: நாகாவதி, வறட்டாறு
  • கிருஷ்ணகிரி: சூளகிரி சின்னாறு
  • திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் ஓடை
  • வேலூர்: மோர்தானா, ராஜா தோப்புகனார்
  • தென்காசி: குண்டாறு, அடவிநைனார் கோவில்
  • தேனி: சோத்துப்பாறை
  • திண்டுக்கல்: வரதமாநதி, குதிரையாறு
  • ஈரோடு: குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம்
  • கோவை: பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிபள்ளம்

90-95% நிரம்பிய அணைகள்: பூண்டி, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், சின்னாறு, வாணியாறு, சாத்தனூர், மருதநதி, ஆழியாறு, பவானிசாகர், நொய்யல் ஆத்துப்பாளையம், மேட்டூர்.

இதையும் படிங்க: மக்களே உஷார்! இடி, மின்னலுடன் கொட்டக் காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்!

மேலும் 76%க்கு மேல் 29 அணைகள், 51%க்கு மேல் 19 அணைகள், 25%க்கு மேல் 15 அணைகள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள அணைகளில் பலவற்றில் 25%க்கும் கீழே தான் நீர் உள்ளது. மேட்டூர், பவானிசாகர், முல்லைப் பெரியாறு போன்ற பெரிய அணைகள் இன்னும் முழு கொள்ளளவை எட்டவில்லை.

நீர்வளத்துறை அதிகாரி மேலும் கூறுகையில், “பருவமழை டிசம்பர் இறுதி வரை இருக்கிறது. இன்னும் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தென்மேற்கு பருவமழை இல்லாவிட்டால், பெரிய அணைகள் நிரம்புவது கடினம்” என்றார்.

வடகிழக்கு மழை சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளை நிரப்பினாலும், விவசாயத்திற்கு தேவையான பெரிய அணைகள் இன்னும் பாதி கூட நிரம்பவில்லை. இது அடுத்த ஆண்டு கோடைக்கால நீர் பற்றாக்குறை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!! டிச., 12 வரை மழை தொடரும்!! வானிலை அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share