அடுத்த 6 நாட்களுக்கு அடித்து ஊற்றப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! வெதர் அப்டேட்!
நாளை முதல் அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்தாலும், உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு மத்தியப் பிரதேசம் முதல் தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
ஏப்ரல் 13 முதல் 18 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஏப்ரல் 12 முதல் 16 வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது.
இதையும் படிங்க: வெயிலுக்கு விட்டாச்சு லீவு! ரெண்டு நாள் நிம்மதி!! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை!!
ஏப்ரல் 12 முதல் 14 வரை அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நிலையில், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று (ஏப்ரல் 12) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்.
நாளை (ஏப்ரல் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் வரை உயரும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். விவசாயிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்பை கவனத்தில் கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம் மற்றும் வெளிப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீர் அருந்துவது, நிழலில் ஓய்வெடுப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்குள்ள மக்கள் மழைக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3 நாட்களுக்கு சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்!! மக்களே உஷார்! வானிலை மையம் அப்டேட்!