×
 
☰

கோவை, மதுரை, நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அக்டோபர் 14ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்கள் உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மாநிலம் முழுவதும் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வரை மழை தொடரக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தீவிரமடைவதன் காரணமாகக் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பாதைகளில் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share