ரூ.7500 கோடியில் என்னென்ன திட்டங்கள்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாடு முழுவதும் சாலை மேம்பால பணிகளை மேற்கொள்ள 7,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சாலைகள் மற்றும் மேம்பாலங்களின் தரத்தை மேம்படுத்துதல், போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பயண நேரத்தைக் குறைத்தல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பட்ஜெட் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்த திட்டங்களுக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சாலை மற்றும் மேம்பால பணிகளை மேற்கொள்ள 7500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொஞ்சமாச்சு அக்கறை இருக்கா? கல்வித்துறை சீரழிக்கிறீங்க! வார்னிங் கொடுத்த நயினார்...
ஆற்றுப் பாலம், சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3268 கிலோ மீட்டர் நீளத்திற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறுகளின் குறுக்கே ஆறு உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர், ஓசூரில் புறவழிச்சாலை அமைக்க 500 கோடி ரூபாயும் ஆறுகளின் குறுக்கே ஆறு உயர் மட்ட பாலம் அமைக்க 295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் 18 கோடி நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதாச்சலம் - தொழுதூர், விருதுநகர்- சிவகாசி, கொடைரோடு - வத்தலகுண்டு சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவையில் 348 கோடி ரூபாயில் 12.5 கிலோமீட்டர் புறவழிச்சாலை அமைக்கப்படும் எனவும் நெல்லையில் 225 கோடி ரூபாயில் 12. 4 கிலோமீட்டர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 220 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழி சாலைகளாகவும், 550 கி.மீ. சாலைகள் இரண்டு வழி சாலைகளாகவும் மாற்றப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... திருமண முன்பணத்தை உயர்த்தியது தமிழக அரசு; எவ்வளவு தெரியுமா?!!