ஐடி கார்டு இல்லாமல் ஓட்டு போடுறாங்க..! தமிழிசை பேச்சுக்கு எதிர்ப்பு..! வாக்குச்சாவடி மையத்தில் பிரச்சனை..!
ஐடி கார்டு இல்லாமல் ஓட்டு போட செல்கிறார்கள் என்று தமிழிசை பேசியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர் தொகுதியில் ஏற்கனவே பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் ஆதரவாளர் வீட்டில் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் பணம் சிக்கியிருந்தது. கடும் சர்ச்சையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. ஐடி கார்டு இல்லாமல் வாக்களிக்க அனுமதிக்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அவர் முறையிட்டார்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்..! தேனி பெரியகுளத்தில் வாக்களித்த ஓபிஎஸ் உறுதி..!
ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுப்புவதாகவும், எப்படி ஓட்டு போடுகிறார்கள் என்ற கேள்வி எழுப்பினார். தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றும் நியாயமாக நடக்கவில்லை என்றால் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழிசையின் இந்த பேச்சுக்கு கடும் திமுகவினர்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தூய பிரான்சிஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்து சேவையில் தாமதம்..! சிங்காநல்லூரில் வாக்கு செலுத்திய பின் அண்ணாமலை பேட்டி..!