சிபிஐ கேட்டதே TVK தான்..! விஜயை சுற்றி அரசியல்..!! ஆனா அதை செய்யறது?..தமிழிசை பளிச் பேட்டி..!
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்டதே தமிழக வெற்றிக் கழகம் தான் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. அடுத்த விசாரணை நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் வைத்து சிபிஐ விசாரணை விஜய் இடம் நடத்தப்பட்டது குறித்தும், பாஜகவின் அழுத்தம் தான் காரணமா? என்பது தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், பாஜகவின் தலையீடு இருப்பதாக எழும் விமர்சனங்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கேட்டதே தமிழக வெற்றி கழகம் தான் என்று தெரிவித்தார். அவர்களின் தொண்டர்களுக்கும், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கும் எல்லாம் தெரியும் என்றும் கூறினார். சட்டப்படி நடப்பதற்கு பாஜக எப்படி காரணமாகும் என்று கேட்டார்.
உச்சநீதிமன்றத்திற்கு சென்று சிபிஐ விசாரணை கேட்டதால், அதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் எல்லாம் சட்டப்படி நடக்கிறது என்றும் ஆனால் பாஜகவை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமா எனவும் கேள்வி எழுப்பினார். விஜயை சுற்றிய அரசியல் நடக்கிறது என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன், ஆனால் அந்த அரசியலை செய்வது யார் என்ற கேள்வியை எழுப்பினார். பாஜக அதற்கு காரணம் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் வாழ்த்துக்கள்… வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்… தமிழில் பேசி அசத்திய பிரதமர் மோடி..!
கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்கியது இன்று உச்சநீதிமன்றம் சரமாரியாக எழுப்பிய கேள்விகளை சுட்டிக்காட்டி தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், டெல்லியிலும் சிபிஐ அலுவலகம் இருப்பதால் விசாரணை நடத்தி இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து...!