"தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!
பாஜக முத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வேலூர் மாவட்டம்.குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் பணத்தை எப்படியெல்லாம் திமுக அரசு சுரண்டியது என்பதற்கு உதாரணம் முன்னாள் அமைச்சர் அன்பில் கைது என கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் எதற்க்கெடுத்தாலும் புதிய கல்விக்கொள்ளை, மும்மொழிக்கொள்கையை எதிர்த்து பேசியே மக்களை திசை திருப்பி வருகிறார்கள் என்றும் அவர் மட்டும் அல்ல யாரெல்லாம் தவறு செய்துள்ளார்களோ அவர்களும் கைது செய்ய வேண்டும் என கூறினார்.
தமிழ்நாட்டில் குழந்தை காணாமல் போவது அதிகரித்துள்ளது. முதல்வரை மாமா என அன்போடு அழைத்த குழந்தைகள் இன்று காணாமல் போவது வருத்தம். சிங்கப்பெண் படை என்ன செய்கிறது வருங்கால சிங்கப் பெண்களை காக்க முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார். முதல்வரின் திரைபடம் போல உள்ளது. 17 சிறைவாசிகள் தப்பியது என்றும் இது ஏதோ திட்டமிட்ட சதியாக தெரிகிறது அதேபோல மின்கட்டணம் அதிகமாக உள்ளது தமிழக மக்களை கைவிடாமல் மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அவ்ளோ சர்வ சாதாரணமா வருது..!! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்..!!
ஆவின் பொருட்களின் விலை தீபாவளிக்குள் குறைக்க வேண்டும் என்றும் முதல்வர் வெற்றி பெற்றதால் அதை தொடர்ந்து திரையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் யார் வேண்டுமானாலும் உரிமை உள்ளது நடிகர் அல்லாதவர்கள் வந்தால் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். அதேபோல யார் வந்தாலும் பாஜக இயக்குகிறது என கூறுகிறார்கள், லட்சுமி, சரஸ்வதி கூட தாமரையில் தான் அமர்ந்துள்ளது அவர்களை பாஜக என சொல்ல முடியுமா? எனும் தாமரை எங்கும் இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!