×
 

ரூ.35,084 கோடி... 5,3445 பேருக்கு வேலை வாய்ப்பு... இன்று கையெழுத்தாகிறது முக்கிய ஒப்பந்தம்....!

தூத்துக்குடியில் வின் ஃபர்ஸ்ட் மின்சார கார் விற்பனையை துவங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், 35084 கோடி ரூபாய் முதலீடுகளையும், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கையெழுத்து இடுகிறார் - இதன் மூலம் 53445 வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என தகவல். 

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். 

முதல் கட்டமாக 1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள்  அமைக்கும் பணி நடந்து  முழுமையாக முடிவடைந்தது. இங்கு VF7,VF6 ஆகிய இரண்டு வகை கார்கள் தயாரிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் அமையும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை ஜூலை மாதத்தில் மின்சார கார் முன்பதிவு தொடங்கியது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் கார்களை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய  முடிவு செய்துள்ளது. இதற்காக தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் கார் ஏற்றுமதி செய்வதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. இப்போ எந்தெந்த ஊர்கள் தெரியுமா..?

ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக்கூடிய முதல் காரை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விற்பனையை துவங்கி வைத்தார். இதோடு சேர்த்து மேலும் நான்கு தொழிற்சாலைகளை துவங்கி வைத்த முதலமைச்சர் இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என கூறினார்.

ஏற்கனவே நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி மையம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த 200 மாணவர்களுக்கு விண்பாஸ்ட் தொழிற்சாலையில் வேலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிகப்படியான கார்கள் இங்கு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் போது கனரக வாகனங்கள் மற்றும் பஞ்சர் ஒட்டுபவர்கள் வரை அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதை ஒட்டி அதில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார் இந்த நிகழ்வில் பல்வேறு சிறுகுரு தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 44 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு குரு தொழில்களுக்கான 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது அதோடு தென் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இடம் முருங்கை காய்களை பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது போன்ற பல்வேறு ஏற்றுமதியாளர்களும் இந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த மாநாடு மூலம் 35084 கோடி ரூபாய் முதலீடுகளையும், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கையெழுத்து இடுகிறார். இதன் மூலம் 53445 வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். 

 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆப்பிள் உதிரிபாக ஆலைகள்.. இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share