×
 

சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்... விருது வழங்கிய கவுரவிக்கும் தமிழக அரசு..! முக்கிய அறிவிப்பு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அரசின் விருதுகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பான விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாற்றுத் திறனாளி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநில அளவில் மொத்தம் ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 10 கிராம் தங்கப் பதக்கம், பரிசுத் தொகை ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் கல்வி, தொழில், சமூகப் பணி, கலை, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூன் 25, 2026 ஆகும். மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விருதுகள் தேர்வு செய்யப்படும் போது, விண்ணப்பதாரர்களின் சாதனைகள், சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு உள்ளிட்டவை முக்கிய அளவுகோல்களாகக் கருதப்படும்.இந்த முயற்சியானது மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினரின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பலருக்கு இந்த விருதுகள் பெரும் உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் உடனடியாக இணையதளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்குமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

இதையும் படிங்க: காலியாகும் அதிமுக கூடாரம்..? முக்கிய தலைகள் தவெகவில் ஐக்கியம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share