மக்கள் விரோத திட்டங்களை கைவிடுங்கள்..! ஜூன் 2ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
திமுக அரசை கண்டித்து வரும் இரண்டாம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கியும், நீர்த்துப்போகவும் செய்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூரில் மயான பூமி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி விரைந்து முடித்திட வேண்டும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், மணலி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும், வட சென்னையை விஷ நகரமாக்கும் கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்பின் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வக்கு இருந்தா "யார் அந்த தம்பி"னு சொல்லுங்க.. ஸ்டாலினை டார் டாராக கிழித்த இபிஎஸ்..!
வரும் ஜூன் இரண்டாம் தேதி திங்கட்கிழமை போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்..!