தலைநகரை கடந்து பரவிய போராட்ட ’தீ’... தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் தகிக்கும் மாணவர்கள் போராட்டம்...!
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வில் இரண்டாவது முறையாக வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நீட் தேர்வை கண்டித்தும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து கரப்பான் பூச்சி அமைப்பைச் சார்ந்த ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைப் போல தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது நீட் தேர்வை கண்டித்தும், அதற்கு பொறுப்பு ஏற்கக்கூடிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ஏராளமான சட்டக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அமைச்சருக்கு எதிராகவும் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆகிய நாங்கள் அணி திரள்வோம் எனவும் மாணவர்கள் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!
இதேபோல். திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் , அதற்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய டெல்லி போலீசாரை கண்டித்து திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி யில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்லூரி மாணவர்கள் 2500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலை கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக இக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதையும் படிங்க: “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!