#Breaking கேரள எல்லையில் நிற்கும் ஆம்னி பேருந்துகள்... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு...!
ஆம்னி பேருந்துகள் விவகாரம் தொடர்பாக விரைவில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
கேரளாவில் ஆம்னி பேருந்துகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் கேரள போக்குவரத்து துறையை கண்டித்து தமிழக ஆம்னி சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழக பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் கேரள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுவதாக நேற்றைய தினம் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினர் திடீரென சிறைபிடித்து, அந்த பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலே இறக்கவிட்டு பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்கிறார்கள் என்றும், தமிழக பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இன்று கூட கேரளா - கோயம்புத்தூர் எல்லை பகுதியில் இருக்கக்கூடிய வாளையார் பகுதியில் பல தனியார் ஆம்னி பேருந்துகள் காலை முதலே மாநிலத்துக்குள்ளே உள்ளே செல்லாததால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலா..!! அப்போ இந்த நம்பர்களுக்கு புகார் கொடுங்க..!!
இந்த நிலையில் தான் இதுதொடர்பாக பேச்சு வார்த்தையை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து அரசு தரப்பில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
எப்போது? எங்கே? பேச்சு வார்த்தை நடைபெறும் என்பதை காலை 10 மணிக்கு பிறகாக முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்து துறையினர் முதற்கட்டமாக கேரளாவில் இருக்கக்கூடிய போக்குவரத்து துறையினருடன் அதிகார தொலைபேசியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, முன்கூட்டியாக அறிவிப்பு வெளியிடாமல் திடீரென்று பேருந்துகளை சிறைப்பிடிப்பது ஏன்? அந்த பேருந்துகள் மட்டுமல்லாமல் அந்த பேருந்து பயணம் செய்யக்கூடிய பயணிகளையுமே சிக்கல்கள் உள்ளாக்குவது ஏன்?, சபரிமலை சீசன் |தொடர்ந்திருக்கக்கூடிய நிலையில் பல தமிழ்நாடு பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லக்கூடிய இந்த சூழ்நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பேருந்துகளை சிறை பிடிப்பது ஏற்புடையது அல்ல எனக் கூறவுள்ளனர்.
இதையும் படிங்க: பாவ்லா காட்டுறீங்களா? கல்லா கட்டுறீங்களா?... ஆம்னி கட்டணம் குறித்து விளாசிய நயினார்...!