×
 
☰

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய மூன்றாவது டென்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரவிருக்கும் மாதங்களில் மாலை நேர உச்சபட்ச மின் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து 7,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான குறுகிய கால ஒப்பந்தப் புள்ளியை (டெண்டர்) தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் மின்தேவையை முழுமையாக ஈடுகட்ட, வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மூன்றாவது டெண்டரை மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் புள்ளியின்படி, வரும் நவம்பர் மாதம் முதல் 2027 மே மாதம் வரையிலான 7 மாத காலத்திற்கு, தினமும் மாலை நேர உச்சபட்ச மின்தேவையைச் சமாளிக்க மாதம் 1,000 மெகாவாட் வீதம் மொத்தம் 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நிலவும் கூடுதல் மின் தேவையைச் சமன் செய்ய இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிடுக! தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

முன்னதாக, நடப்பு அக்டோபர் மாத இறுதி வரை தேவைப்படும் 4,500 மெகாவாட் மின்சாரத்திற்கும், அதைத் தொடர்ந்து 2027 பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான கோடை காலத் தேவைக்காக 15,000 மெகாவாட் மின்சாரத்திற்கும் என ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக டெண்டர்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது 3-வது டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின் கணக்கீடு இனி தனியாரிடம்! அக்டோபர் முதல் 6 மாதங்களுக்கு ஒப்படைக்க மின்வாரியம் முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share