×
 

கூட்டு பாலியல் தொல்லை... சிறுமியை சீண்டிய சிறுவர்கள் உட்பட 5 பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை...!

பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் தொல்லை; 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது 

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் 30ம் தேதி தனது பாட்டி ஊரில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். சிறுமிக்கு ஏற்கனவே பழக்கமான புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் திருவிழாவுக்கு வந்துள்ளார். 

இந்நிலையில் சந்தோஷ் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். சிறுமியுடன் சந்தோஷ் (24) செல்வதை பார்த்த அடைக்கத்தேவன் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20) அவரது நண்பர்களான சோலைக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (18) மற்றும் 17, 15 வயது இரண்டு சிறுவர்கள் என 4 பேரும் பின்தொடர்ந்து சென்று சந்தோஷை விரட்டிவிட்டு  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்த போது முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனிடையே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் கிராமத்தில் உள்ள சிலருக்கு தெரியவந்தது. அவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசில் கொடுத்த தகவலின்பேரில் சந்தோஷ், அரவிந்த், ஆறுமுகம் மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.  

இதையும் படிங்க: சிறுமியிடம் அத்துமீறல்..! பிரபல தொழிலதிபரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..! பரபரப்பு..!!

இதையறிந்த சிறுமியின் தாய்  சேதுபாவாசத்திரம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கூட்டுப் பாலியலில் ஈடுபட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பழனி கோயிலில் களமிறங்கியது புதிய குழு... தேவஸ்தான அதிகாரிகளுடன் நேரில் ஆலோசனை... வெளியே எடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share