மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!
ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களுக்குள், முதல்வர் விஜய் ஒரு முக்கியமான அதிரடி முடிவை எடுத்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கும் 717 டாஸ்மாக் மது விற்பனை கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை பொதுமக்கள் நலன் கருதியே எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் 500 மீட்டர் தொலைவுக்குள் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,765 டாஸ்மாக் கடைகளில் இவை அடங்கும். இந்த கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் விஜயின் உத்தரவை அடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 513 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக எழுத்து 717 மது கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் கடிதம்!
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார். கோவை மாவட்டத்தில் 69, தூத்துக்குடி மாவட்டத்தில் 63 உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இதுவரை 513 மது கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தற்போது வரை வேலை வழங்கப்படாததால் அப்பகுதியில் உள்ள குடோன்களுக்கு செல்கின்றனர்.
இதையும் படிங்க: CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!