குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..!! தமிழ்நாட்டில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! தமிழக அரசு அதிரடி..!!
வரும் 26ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, தேசிய மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் 'உலர் நாள்' கடைபிடிக்கும் விதிமுறையை கடுமையாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டியும், பிப்ரவரி 1-ஆம் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினத்தையொட்டியும் (தைப்பூச நாள்) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மதுவிற்பனை இடங்களும் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் விதிமுறைகளின்படி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற தேசிய விடுமுறை நாட்களில் மதுவிற்பனை தடை செய்யப்பட வேண்டும். இதனால், ஜனவரி 26-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், மனமகிழ் மன்றங்களில் இயங்கும் மதுக்கூடங்கள், நட்சத்திர விடுதிகள், தமிழ்நாடு விடுதி நிறுவனத்தின் மதுக்கூடங்கள், சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் பார்கள், வெளிநாட்டு மதுபான விற்பனை இடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை மதுவிற்பனை நிலையங்களும் மூடப்படும்
இதையும் படிங்க: என்னது..?? டாஸ்மாக்கில் மும்மொழி அறிவிப்பு பலகையா..?? TNFactcheck விளக்கம்..!!
இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். அதேபோல, பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூச நாளானது வள்ளலார் சித்தியடைந்த நினைவு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் சந்திரனின் நிலை, நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட விழாவாகும். இந்நாளில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட பிரபல முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டப்படும், ஏழு திரைகள் நீக்கி வழங்கப்படும்.
இந்த ஆன்மீக முக்கியத்துவத்தை மதிக்கும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் தைப்பூச அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கிறது. எனவே, பிப்ரவரி 1-ஆம் தேதியும் மேற்கூறிய அனைத்து மதுவிற்பனை இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வோர் அல்லது சட்டவிரோதமாக பதுக்கி வைப்போர் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் தனித்தனியே உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இது மதுவிலக்கு கொள்கையை வலுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது. மதுவிலக்கு விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், தேசிய மற்றும் ஆன்மீக நாட்களில் பொதுமக்களின் அமைதியும், பக்தியும் உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த உத்தரவுகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! காரணம் இதுதான்..!! கலெக்டர் அதிரடி அறிவிப்பு..!!