உடனே நோட் பண்ணுங்கப்பா... ‘குடி’மகன்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்... எப்ப வேணா தேவைப்படலாம்...!
டாஸ்மாக் மீது புகார் அளிக்க வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டு, அதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் பணியாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வை அறிவித்திருந்தார். அதே நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான எம்.ஆர்.பி.யை விட ஒரு ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தாலும், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் புகார்கள், குறைகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதற்காக புகார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தங்களது புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 8920 வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வருவாயில் புதிய சாதனை? 4 மாதத்தில் ரூ.17,854 கோடி! முழு கணக்கு இதோ!
அதேபோல், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 7397 2030 என்ற எண்ணில் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வாடிக்கையாளர் சேவை மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக டாஸ்மாக் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றின் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை நேரடியாகத் தெரிவிப்பதற்காக இந்த வாடிக்கையாளர் சேவை மையம் தொடர்பான கூடுதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏன் நீங்க வாங்கலயா.? பாட்டிலுக்கு 10 ரூபாய்..! பேரவையில் காரசார வாதம்..!