அச்சச்சோ... அப்போ அது எல்லாமே வதந்தியா...?? - ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் சங்கத்தினர் பரபரப்பு புகார்...!
பாட்டிலை திரும்ப பெறுவதற்கான 10 ரூபாய் பெறும் நடைமுறையை மதுபானத்திற்கு கூடுதலாக பணம் வாங்குவதாக போலியான தகவல்களை சமூகவலைதளங்களில் பதவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் மனு அளித்தனர்.
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் மீது 10 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதாக மாவட்டந்தோறும் குற்றச்சாட்டி குடிமகன்கள் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், அதற்கான காரணத்தை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரே கடிதம் மூலம் முதலமைச்சர் விஜய்க்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் ஒரு பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலித்து, பாட்டில் திருப்பித் தரும்போது அதை திரும்ப அளிப்பதாகவும், இரண்டாவது, மது கடைகளின் நிர்வாக செலவுகளை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்காமல் பணியாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், பாட்டிலை திரும்ப பெறுவதற்கான 10 ரூபாய் பெறும் நடைமுறையை மதுபானத்திற்கு கூடுதலாக பணம் வாங்குவதாக போலியான தகவல்களை சமூகவலைதளங்களில் பதவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: திருநங்கைகளின் உரிமைக்குரல்..! செவி சாய்த்த முதல்வர் விஜய்..! முக்கிய ஆலோசனை..!
பள்ளி, வழிபாட்டுதலங்கள், பேருந்துநிலையங்கள் அருகேயுள்ள FL2 வகை மதுபான கடைகளையும் மூட வேண்டும், அரசு உத்தரவுப்படி நிரந்தரமாக மூடப்பட்ட மதுபானக் கடைகளில் பணிபுரிந்து, பணியிழந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு பிற அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நியமனம் செய்வது, பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதாக தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதேபோல், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் டாஸ்மாக் மதுபானக் கடை உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து சங்கங்களை சேர்ந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். வழக்கை திரும்ப பெறாவிட்டால் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! இங்கிலாந்தில் இளம் மேயர்! இந்திய வம்சாவளி இளைஞர் படைத்த சாதனை!