×
 

ஜனவரி 16, 26-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்! பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் ஜனவரி 16, 26 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், மது விற்பனை தொடர்பாக முக்கியமான அறிவிப்பைத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) வெளியிட்டுள்ளது. முக்கியத் தலைவர்களின் நினைவு தினங்கள் மற்றும் தேசியப் பண்டிகைகளை முன்னிட்டு ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் மது விற்பனைத் தடையின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வரும் மூன்று முக்கிய தினங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை), ஜனவரி 26-ஆம் தேதி இந்திய குடியரசு தினம் (திங்கட்கிழமை) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று தினங்கள் ‘வறட்சி தினமாக’ (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் கிளப்புகளில் உள்ள பார்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் முன்கூட்டியே திட்டமிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மற்றும் ரகசியமாக பார்களைத் திறந்து வைப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மேலாளர்கள் மற்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் சட்டவிரோத விற்பனையைத் தடுக்கப் பறக்கும் படைகள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போக ரெடியா மக்களே..!! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

இதையும் படிங்க: லோக் பவனில் கலைகட்டிய பொங்கல் விழா.. பாரம்பரிய  உறி அடித்து மகிழ்ந்த ஆளுநர் குடும்பத்தினர்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share