×
 

டிச.16 முதல் காலவரையற்ற போராட்டம்.. கோரிக்கை நிறைவேற்றுங்க! டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு..!

டிசம்பர் 16ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, 2016-ல் அமல்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் அடிப்படையில், பார்வையற்றோருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் வகையில் பல்வேறு அரசாணைகளை வெளியிட்டது. 

தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில், பார்வை இழந்தவர்களின் வாழ்வுக்கு ஒளி ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன், இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பிறகு நிரந்தரமாக பணியில் தங்குவதற்கான வழி திறக்கப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான பார்வையற்ற இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த அரசாணை திடீரென ரத்து செய்யப்பட்ட சம்பவம், அவர்களின் கனவுகளை சிதைத்து, ஆழமான ஏக்கமும் விரக்தியும் ஏற்படுத்தியது.

அரசு அலுவலகங்களில் 2 ஆண்டு பணியாற்றும் பார்வையற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலி பணியிடங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளை சேர்க்கும் அரசாணை 20 ரத்து செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: CAA தான் அவங்க நோக்கம்..! இது தேர்தல் ஆணையத்தின் வேலையா? வெளுத்து வாங்கிய திருமா...!

எனவே, டிசம்பர் 16 முதல் தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க (ஏஐடியூசி) மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசு திறந்த மனதுடன் பேச்சு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், காலி பாட்டில்களை திரும்பபெறும் திட்டம் தொடர்பாக அனைத்துசங்க கோரிக்கைகளை பரிசீலிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வேண்டவே வேண்டாம்... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு... திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share