×
 

டாஸ்மாக் இயங்காது... கடையடைப்பு போராட்டம்..! போராட்டக்குழு அதிரடி அறிவிப்பு..!

வரும் ஒன்பதாம் தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்ட நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்பட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது 2026 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் தொடர்ச்சியாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் ஏற்கனவே பல நாட்களாக நீடித்து வருவதால், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ஊழியர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகளில் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இன்றும் அவர்களுக்கு நிரந்தர ஊழியர் அந்தஸ்து கிடைக்கவில்லை. இதனால் பணி பாதுகாப்பு இல்லாமல், எப்போது வேலை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் மிக முக்கிய கோரிக்கை பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதுதான். இதைத் தவிர, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பென்ஷன் போன்ற சமூக பாதுகாப்பு நலன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் காரணமாக ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தால் கடைகளில் ஏற்கனவே இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் பணியை சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்..! பணிச்சுமை கூடாது... மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிடிவி வலியுறுத்தல்..!

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் வரும் ஒன்பதாம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பிப்ரவரி ஒன்பதாம் தேதி மூன்று மணி நேரம் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் போராட்ட நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மது பிரியர்களுக்கு ஷாக்..! நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்..! முக்கிய அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share