×
 

தஞ்சையில் நிகழ்ந்த கொடூரம்... ஆசிரியை குத்திக் கொலை..! காதலன் வெறிச்செயல்...!

தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை அவரது காதலனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதால் ஏற்படும் விரக்தியை வெளிப்படுத்த முடியாமல் பல இடங்களில் கொலைச் சம்பவங்கள் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தான் வைத்திருந்த காதலை என்ன செய்வதென்று தெரியாமல் ஏமாற்றப்பட்டது நினைத்து நினைத்து, அவை கோபமாக மாறி பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

அப்படி, ஆசை ஆசையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தமானதால் ஆத்திரத்தில் காதலியை குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியின் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் காவியா. இவரை அஜித் குமார் என்பவர் 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காவியாவிற்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிகிறது. தான் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அஜித்குமார் காவியாவை கத்தியால் ஒட்டி கொலை செய்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: "அந்த 3 ஆசிரியர்கள் என்னை டார்ச்சர் பண்ணாங்க " ... மாணவி கொடுத்த பகீர் மரண வாக்குமூலம்...!

தன் காதலிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்ததால் காதலன் அஜித் குமார் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். காவியா பள்ளி செல்லும் வழியில் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் அவர் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தரைப்பாலத்தில் கிடந்த தலையில்லாத முண்டம்... காணாமல் போன இளைஞர் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share