என்னென்ன கோரிக்கைகள்? ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தையை தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உடனான பேச்சு வார்த்தை தொடங்கியது
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் (Part-time teachers) தங்கள் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2025 டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த போராட்டம், 2026 ஜனவரி வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது வெறும் ஊதிய உயர்வு கோரிக்கை மட்டுமல்ல. பல ஆண்டுகளாக தொடரும் அநீதி, வேலைக்கும் ஊதியத்துக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு, பணி நிரந்தரம் இல்லாத நிலை ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பெரும் எழுச்சியாக உருவெடுத்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை "சம வேலைக்கு சம ஊதியம்" என்பதுதான். ஒரே வகுப்பில், ஒரே பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையே மாதம் சுமார் 8,000 முதல் 20,000 ரூபாய் வரை ஊதிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அலவன்ஸ்கள் அனைத்தும் அடிப்படை ஊதியத்துடன் தொடர்புடையவை என்பதால், இந்த இழப்பு ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகி வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும் என்று கோரி, சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம், மனித சங்கிலி, காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல நாட்கள் தொடர்ந்து போராடியதால், காவல்துறையினர் ஆசிரியர்களை கைது செய்து வெளியேற்றிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. சில சமயங்களில் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டனர்.இதேபோல் பகுதிநேர ஆசிரியர்களும் தங்கள் பிரச்சினையை முன்வைத்து போராடி வருகின்றனர். பல ஆண்டுகளாக தற்காலிகமாகவோ, பகுதிநேரமாகவோ பணியாற்றி வரும் இவர்கள், ஒரே வேலை, ஒரே பொறுப்பு இருந்தும் நிரந்தரப் பணியாக மாற்றப்படாமல் உள்ளனர். சம்பளம் ரூ.7,500 வரை மட்டுமே உள்ளது. திமுக 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கைகளில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர் என்னிடம் பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகத் தீர்வு எட்டுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: போராடுனா கஞ்சா CASE... போலீஸ் பகிரங்க மிரட்டல்..! இடைநிலை ஆசிரியர்கள் புகார்..!