போராடும் ஆசிரியர்கள்... நீளும் கோரிக்கை..! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை..!
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் என்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து,
2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது. இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இதே போல் பகுதி நேர ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது போராட்டத்தின் மையக் கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகும். இந்தப் போராட்டத்தின் பின்னணி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி. இடையிலே ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "நோ ஒர்க் - நோ பே!" போராடும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் போராடும் நிலையில் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடக்கிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடைநிலை ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதை போல் பணி நிரந்தரம் கேட்டு போராடும் பகுதிநேர ஆசிரியர்களிடமும் என்று பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: கொந்தளிப்பில் இடைநிலை ஆசிரியர்கள்..!! சென்னையில் 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!