×
 

வலிக்குது சார். கதறிய ஆசிரியர்... இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது..!

இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டபோது ஆசிரியர் ஒருவர் வலியில் துடித்த சம்பவம் நடந்தது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது. இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,370 வழங்கப்படுகிறது.

அதே நாளுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வெறும் ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. ஒரே தகுதி, ஒரே பணி, ஒரே பொறுப்புகள் இருந்தும் இந்த ஊதிய வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தற்போது அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து மாத ஊதியத்தில் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் இந்த முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மாநிலங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.11,000க்கு மேல் அடிப்படை ஊதியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாடு இதில் பின்தங்கியுள்ளது.இந்தக் கோரிக்கை திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், 2018இல் நடந்த போராட்டத்தின்போது நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும் இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு. 

இதையும் படிங்க: உலகம் அழிய போகுது... உடான்ஸ் விட்டு வசமாக சிக்கிய சம்பவம்... பதம் பார்த்த போலீஸ். !

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கண்ணனை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்ற போது காலைப் பிடித்து போலீசார் தள்ளி உள்ளனர். வலுக்கட்டாயமாக ஒரு காலை தூக்கி வாகனத்திற்குள் தள்ளிய போது ஆசிரியர் கண்ணன் வலியில் துடித்துள்ளார். 

இதையும் படிங்க: ஆசிரியர் கையை போலீசார் உடைத்த புகார்... கடும் அதிருப்தி... சக ஆசிரியர்கள் தர்ணா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share