டாஸ்மாக் பார் டெண்டரில் பல ரூ.100 கோடி முறைகேடு.. திமுக முக்கிய புள்ளிகளை தூக்கப்போகும் அமலாக்கத்துறை..!
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணையில் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் முறைக்கேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் போது டாஸ்மாக் பார்களிலும் முறைக்கேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒரு சில நபர்கள் பல நபர்களின் ஜிஎஸ்டி எண்களை பயன்படுத்தியும், டிமாண்ட் டிராப் கொடுத்தும் பார்களை டெண்டர் எடுத்திருப்பது அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில தெரிய வந்துள்ளது. அந்த நபர்கள் பல நபர்களுக்கு சப் காண்டக்டர் போல பார்களை ஒத்துக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பார்களில் 30 முதல் 40%க்கு மேல் இது போன்ற மோசடி செய்யப்பட்டு டெண்டர் எடுத்துள்ளதாக அமலக்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மாவட்டந்தோறும் பல பார்களைக் கொண்ட நபர்கள், அரசுக்கு தெரியாமல் அதனை பல நபர்களுக்கு சப் காண்ட்ராக்ட் போல விட்டிருப்பது, அதன் மூலம் மதுபான வகைகளை அதிக அளவில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ததையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. பார் அமைப்பதற்கு டாஸ்மாக் அருகே உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்களிடம் என்ஓசி வாங்குவதிலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு இடங்களில் லைசன்ஸ் இல்லாத பார்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதும், அந்த பார்களுக்கும் டாஸ்மாகில் இருந்து மது விற்பனை நடந்து வருவதும், அந்த பார்கள் மூலமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் லைசென்ஸ் இல்லாத பார்களை நடத்தப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த தகவல்களை அமலாக்கத்துறை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமலாக்கத் துறை பேரைக் கேட்டாலே திமுக அதிருது.. நயினார் நாகேந்திரன் மரண கலாய்.!!
குறிப்பாக சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முறைகேடாக டாஸ்மாக் பார்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூல பல 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் விசாகன் டாஸ்மார்க் நிறுவன பொதுமலா ஜோதிசங்கர் மேலாளர் சங்கீதா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!