×
 

பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!

பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சனை கேட்டு நடந்த தகராறில் மனைவி மற்றும் மாமாவை எரித்துக் கொன்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தராததால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி, மாமாவை சுத்தியலால் அடித்து டீசல் ஊற்றி தீ வைத்து கணவன் வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளார். தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம், காசிபேட் மண்டலம், கடிபிகொண்டா கிராமத்தில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டில் ராஜசேகர் வசித்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீலதா சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார்.

அவர்களுக்கு ராஜஸ்ரீ, தேஜஸ்வி மற்றும் மனோஜ்னா என்று மூன்று மகள்கள் உள்ளனர். ராஜசேகர் ஆட்டோ ஓட்டுநராகவும் சமையல்காரராகவும் பணிபுரிந்து, தன் பிள்ளைகளின் வளர்த்து குடும்பம் நடத்தி வந்தார். 2023-ல், தனது மூத்த மகள் ராஜஸ்ரீயை, வாரங்கல் மாவட்டம், கீசுகொண்டா மண்டலம், ஷயாம்பேட் ஹவேலியைச் சேர்ந்த பொக்குலா பிரவீனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவரது இரண்டாவது மகள் தேஜஸ்வினி ஹனுமகொண்டாவில் வசிக்கிறார், மற்றொரு மகள் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

திருமணத்தின் போது, அவர் ராஜஸ்ரீக்கு 3 லட்சம் ரூபாய் வரதட்சணையாகவும், வீட்டு உபயோகப் பொருட்களையும் ராஜசேகர் கொடுத்தார். ராஜஸ்ரீ - பிரவீனுக்கும் 2024-ல் மகன் ஜெயான்ஷ் பிறந்தான். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரவீன், தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் உள்ள மௌலாலியில் உள்ள கோகோ-கோலா நிறுவனத்தில் பணிபுரிந்து வசித்து வந்தார். பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, கடந்த 6 மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜஸ்ரீயைத் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் ராஜஸ்ரீ கடந்த பிப்ரவரி மாதத்தில் தவறி விழுந்து வலது கையை உடைத்துக் கொண்டார். இதனால், வேலைகளைச் சரியாகச் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதையும் படிங்க: குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

ஒரு மாதத்திற்கு தன் தந்தையிடம் குழந்தைக்குப் அன்னாபிரசனம் பூஜை செய்ய தந்தை வீட்டிற்கு வந்தார். இந்தநிலையில் மீண்டும் வரதட்சணை கேட்டு சண்டையிட்டுள்ளார். பிரவீன் வீட்டில் இருந்த சுத்தியலால் தன் மாமா ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ராஜஸ்ரீயின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் இருவரின் தலைகளும் பிளந்து, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என நினைத்து பிரவீன், அவர்கள் இருவர் மீதும் டீசலை ஊற்றித் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கேட்டபோது பிரவீன் முன்னுக்குப் பின் முரணாக பேசிய நிலையில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share