×
 

#BREAKING டெண்டர் விதிமீறல்... சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்த தவெக அரசு... 3 நகராட்சி ஆணையர்கள் மீத அதிரடி ஆக்‌ஷன்...!

டெண்டர் விதிமீறல் தொடர்பாக செங்கம், கோத்தகிரி, உடுமலையில் ஒழுங்கு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது 

டெண்டர் விதிமீறல் தொடர்பாக செங்கம், கோத்தகிரி, உடுமலை ஆகிய மூன்று நகராட்சிகளில் ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெண்டர் நடைமுறைகளில் விதிமீறல்கள் நடைபெற்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, மூன்று நகராட்சிகளிலும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, டெண்டர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு விதிமுறைகளுக்கு மாறாக வெறும் ஒன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடைமுறை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து விசாரணையும் ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

டெண்டர் செயல்முறையில் முறைகேடுகள் நடந்ததாக வெளியான செய்தியின் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட மூன்று நகராட்சிகளிலும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், டெண்டர் சமர்ப்பிக்க மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்ட விவகாரமும் விசாரணையின் முக்கிய அம்சமாக உள்ளது.

இதற்கு முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் குருத்தங்கோடு ஊராட்சியில், ரூ.4 லட்சம் மதிப்பிலான பணிக்கான டெண்டருக்கு 30 நிமிடங்கள் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

வழக்கமாக, டெண்டரின் மதிப்பைப் பொறுத்து குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுவது நடைமுறையாக உள்ளது. ஆனால், இந்த டெண்டருக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டெண்டரை வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அறிவிப்பின்படி, ஜூலை 13-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே டெண்டர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய கால அவகாசம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share