தென்காசியை உலுக்கிய கோர விபத்து..!! தனியார் பேருந்தின் உரிமம் ரத்து..!! கலெக்டர் அதிரடி உத்தரவு..!!
தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசியில் இருந்து கேரளா உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லைக்கு ஒன் டூ ஒன் மற்றும் ரூட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தென்காசியில் இருந்து கடையநல்லூர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தனியார் பேருந்துகள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதியதில், ஐந்து பெண்கள் உட்பட ஆறு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: அடடே! தென்காசி மாவட்டத்திற்கு 10 மாஸ் அறிவிப்புகள்...! முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்...!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்துகள் விபத்தில் சிக்கினவா? அல்லது அதிவேகத்தில் இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தகவலறிந்து சென்ற ஆட்சியர் கமல் கிஷோர், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கேகேஎஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கே.எஸ்.ஆர் (KSR) என்ற தனியார் பேருந்தின் போக்குவரத்து உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ளார். மேலும் ஆட்சியர் கமல் கிஷோர், இந்த விபத்து போக்குவரத்து விதிகளை மீறிய வேகமும், ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்டது. பொது பாதுகாப்பை காக்க கேஎஸ்ஆர் பேருந்தின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்கிறோம் என்று தெரிவித்தார். போக்குவரத்துத் துறை சார்பில் கேஎஸ்ஆர் பேருந்தின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்து தமிழ்நாட்டில் சமீப காலங்களில் ஏற்படும் சாலை விபத்துகளின் தீவிரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் தென்காசி மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விபத்துகளில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போக்குவரத்து நிறுவனங்களுக்கு கடுமையான கண்காணிப்பு தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக பயிற்சி விமானம்..!! ஜஸ்ட் மிஸ்ஸில் விமானி எஸ்கேப்..!!