பஞ்சாபில் 16 பயங்கரவாத தாக்குதல்.. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி..!
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த 2024ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் சண்டிகரின் நடந்த குண்டுவீச்சு சம்பவத்தில் ஹேப்பி பாசியா எனப்படும் ஹர்ப்ரீத் சிங்கிற்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதியான இவனுக்கு எதிராக, கடந்த ஜன., மாதம் ஜாமினில் வெளியே வர முடியாதபடி, பிடிவாரண்ட்டை என்.ஐ.ஏ., பிறப்பித்திருந்தது.
ஏற்கனவே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் உள்பட பஞ்சாப்பில் 14 குண்டுவீச்சு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ஹேப்பி பாசியாவுக்கு, 2 பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., அமைப்பினருடன் நேரடி தொடர்பிலும் இருந்து வந்துள்ளான். மொத்தம் 18 குற்ற வழக்குகளில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த ஹேப்பி பாசியாவை, கடந்த ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது குறித்து FBI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாது : அதில் ஹர்ப்ரீத் சிங் இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகவும் கூறப்பட்டது. ஹேப்பி பார்சியா மற்றும் ஜோரா என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இதையும் படிங்க: பிரிக்ஸ் நாடுகளை பழிவாங்கும் அமெரிக்கா! ட்ரம்ப் ஆட்டத்திற்கு சீனா கொடுத்த பதிலடி!!
பிரிட்டனில் சிறிது காலம் தங்கிய பிறகு, அவர் 2021 இல் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க, அவர் பர்னர் போன்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பப்பர் கால்சா இன்டர்நேஷனல் (BKI) என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் ஹர்பிரீத் சிங். ஹாப்பி பாஸியா என்றும் அழைக்கப்படுகிறான். போலீஸ் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக மட்டும் அவன் மீது பல வழக்குகள் உள்ளன. தீவிரவாத செயல்களுக்கு தேவையான பணத்தை திரட்ட, முக்கிய நபர்களை கடத்துவது அவனது வாடிக்கை. இதற்காக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அவனை தேடி வருகிறது.
அக்டோபர் 1, 2024 அன்று பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில், ஹர்ப்ரீத் சிங்கை தலைமறைவு குற்றவாளியாக இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம், சண்டிகரின் செக்டார் 10/டி இல் நடந்த கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக அவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ₹5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்தது.
மார்ச் 23 அன்று, தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) இன் நான்கு செயல்பாட்டாளர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது, அதில் ஹர்ப்ரீத் சிங் ஒரு குற்றவாளியாக பட்டியலிடப்பட்டார். மும்பை 26/11 தாக்குதலில் தஹாவூர் ராணா நாடு கடத்தப்பட்ட பிறகு, இந்த கைது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது
இந்த நிலையில் தான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில், FBI அதிகாரிகள் ஏப்ரலில் அவனை கைது செய்தனர். பாஸியாவை இந்தியாவுக்கு கொண்டுவர என்.ஐ.ஏ அதிகாரிகள் முயற்சி எடுத்து வந்தனர். அவனை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டும் உத்தரவிட்டதால் விரைவில் அவன் இந்தியா கொண்டுவரப்பட உள்ளான். இங்கு வந்த பிறகு அவன் மீது உபா சட்டம் முதலான பயங்கரவாத சட்டங்களின் கீழ் பல்வேறு வழக்குகள் பாயும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் கைது எப்போ? ட்ரம்பை மீண்டும் சீண்டும் எலான் மஸ்க்.. புதுக்கட்சி துவங்கியதும் பற்ற வைத்த வெடிகுண்டு!