மதுரையில் இஸ்லாமியர் போர்வையில் பயங்கரவாதிகள் நடமாட்டம்?... பகீர் கிளப்பும் பாஜக!
காஷ்மீரில் பஹல்காம் நகரில் நடந்த வன்முறை - துப்பாக்கி வைத்து அப்பாவிகளை கொன்றவர்கள் மீது கண்டனம் தெரிவித்து, அவர்களை கைது செய்யக்கோரியும், கருப்பு பேட்ச் அணிந்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருமங்கலம் தொகுதியில் இஸ்லாமியர்கள் போர்வையில் , ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையின்றி தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, பாஜகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து , வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு, காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் 26 இந்தியர்களை அராஜக முறையில் சுட்டுக் கொன்ற கயவர்களை கண்டித்தும் அவர்களுக்கு கைது செய்ய கோரியும், பாஜகவின் தேசிய குழு உறுப்பினர் பழனிவேல் சாமி தலைமையில், 100 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கருப்பு பேட்ச் அணிந்து கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இறுகுகிறது பிடி..! சல்லடை போட்டு தேடும் என்.ஐ.ஏ.! பள்ளத்தாக்கில் பதுங்கிய பயங்கரவாதிகள்..!
திருமங்கலம் தொகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் , அவர்கள் தமிழ்நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் எனவும் , அவர்கள் அனைவரும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இன்றி வசித்து வருவதாகவும், அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் காவல்துறை மந்தமாக செயல்படுவதாகவும், அவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றக்கோரி , பிஜேபி சார்பில் வட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக , கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இமான் அலி, ஹைதர் அலி ஆகியோரை காப்பாற்றுவதற்காக , துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் திருமங்கலத்தில் தான் எனவும், அத்வானி திருமங்கலம் வழியாக செல்லும் பாதையில், வெடிகுண்டு வைத்ததும் திருமங்கலம் பகுதியில் தான் எனவும் பாஜக - வினர் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: எங்க அண்ணனை கொன்னவங்க சாகணும்..! காஷ்மீரில் உயிர்தியாகம் செய்த வீரனின் தங்கைகள் கண்ணீர்..!