"தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும், சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!
மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து 6 திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: தொழில் முதலீடுகளை ஈர்க்க.. லண்டன் சென்ற முதல்வர் விஜய்.. திரண்ட தமிழர்கள், களைகட்டிய வரவேற்பு!!