"தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமல்"..! பிறக்கும் குழந்தைகளுக்கு SPECIAL GIFT.!! தமிழக அரசு அறிவிப்பு..!!
தாய்மாமன் தங்க மோதிர திட்டம் அமலாகி இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதலவருமான விஜய் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 2026 மார்ச் 7 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் நலத் திட்டங்களை அறிவித்தார். அவற்றில் மிகவும் கவனம் பெற்ற மற்றும் பரவலாக விவாதிக்கப்பட்ட திட்டம் தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். இது தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் அரசின் சார்பில் வரவேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வமான நலத் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் மையக் கரு, “தாய்மாமன்” என்ற பெயரில் அழைக்கப்படுவது தமிழ் கலாச்சாரத்தில் உள்ள உறவு முறையைப் பிரதிபலிக்கிறது. தாய்மாமன் என்பவர் பிறந்த குழந்தைக்கு பரிசுகள், ஆசிகள் வழங்கும் பாரம்பரியப் பாத்திரத்தை அரசு ஏற்றுக்கொள்வதாக இதன் அர்த்தம்.
தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். இதனுடன் இணைந்து ஒரு பேபி வெல்கம் கிட் வழங்கப்படும். பேபி வெல்கம் கிட்டில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், பேபி டிரெஸ்கள், தரமான பேபி சோப்புகள், பேபி ஆயில், பவுடர், கொசு வலைகள், பொம்மைகள், நாப்கின்கள், டயப்பர்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேளத்தாளங்களுடன்..! சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் செய்த அனிதா ராதாகிருஷ்ணன்..!
இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நேற்று முதல் அமலானது. தமிழக அரசு இதனை பூர்வமாக அறிவித்துள்ளது. தாய்மாமன் திட்டம் நேற்று முதல் அமலானாலும் செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்க அப்பா எங்க காணோம்?! முதல்வர் விஜய் குட்டி ஸ்டோரி! ரசித்து சிரித்த எடப்பாடி!