×
 

ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்! விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்த கோர்ட்டு விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு வந்தது. நீதிபதி சசிகலா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை வரும் ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2021 முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தனக்கு அழுத்தம் கொடுத்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இன்றைய விசாரணையின்போது, ஜூன் 15-ம் தேதி விஜயும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகாமல் காணொலி வழியாக (வீடியோ கால்) ஆஜராக அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், இது குடும்பப் பிரச்சினை என்பதால் ஊடகங்களில் செய்தி வெளியிடவோ, விவாதிக்கவோ தடை விதிக்க வேண்டும் எனும் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

சங்கீதா தரப்பிலும் நேரில் ஆஜராகாமல் காணொலி வழியாக ஆஜராக மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்துடன் (மியூச்சுவல் கன்சென்ட்) பிரிந்து விடுவது என சுமூக முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஜூன் 15-ம் தேதி இருவரின் விளக்கத்துக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறும் இந்த நேரத்தில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த வழக்கு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குடும்ப விவகாரம் என்பதால் இரு தரப்பும் அமைதியாக விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது. 

ஜூன் 15-ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share