×
 

”10 வயசுல இருந்து நடிக்கிற உனக்கே அப்படின்னா... 50 வருஷமா அரசியலில் இருக்குற எங்களுக்கு...” - விஜயை டைரக்ட்டாக அட்டாக் செய்த தமிழிசை...!

அதிமுக தலைவர்கள் அடிக்கடி பாஜக தலைவர்களை சந்திப்பால் நட்பு தான் விரிவடையும், பிரச்சனை என எடுத்துக் கொள்ள கூடாது என அதிமுக டெல்லி பயணங்கள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறும் போது : கோவை,  திருப்பூர் என்றால் என்ன நகரம் என்பது நமக்குத் தெரியும். சிலர் புதிதாக வந்து இது மஞ்சள் நகரம் என்று கண்டுபிடிக்க கூடிய நிலையில் தமிழக அரசியல் உள்ளது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது.  தேர்தலையும் வலுவாக நாங்கள் சந்திப்போம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பூரண சந்திரன் என்பவர் அந்த தீபத்தியை அவரது உடலில் ஏற்றி உயிரிழந்திருக்கிறார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவு வந்தவுடன்  துப்புரவு தொழிலாளர்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்துகிறார்கள். சென்னையில் சில கோவில்களை ஒரு மணிக்கு வந்து இடிக்கிறார்கள்.  என கூறுகிறார்கள் என்றார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வந்த பிறகும் கூட நீதிபதி மீது குற்றம் சாட்டி உள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் தூண் முதலில் தூணே கிடையாது என்று கூறினார்கள், பிறகு தூண் உள்ளது ஆனால் அதில் தீபம் ஏற்ற மாட்டோம் என்று கூறுகிறார்கள், அது தீபத்தூண் ஆனால் அதில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்று கூறுகிறார்கள், தற்பொழுது மீண்டும் அது தீபத்தூண் இல்லை சமணர்கள் இயற்றிய விளக்கத் தூண் என்கிறார்கள் ஆனால் சமணர்கள் இரவு நேரம் விளக்கு ஏற்ற மாட்டார்கள், தற்பொழுது அது சிக்கந்தர் தூண் என்று கூறுகிறார்கள், அந்த தூண் உங்களுக்கு உரிமையா என கேள்வி கேட்கிறார்கள் இஸ்லாமிய திருவிழா நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் ஆனால் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதி இல்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் என்றால் அது உச்சியில் தான் இருக்கிறது என்று  கண்டுபிடிக்கிறார்கள்.

இதையும் படிங்க: "என்னை ஏன் வம்பில் இழுத்துவிடுகிறீர்கள்?" ... விஜய் பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன ஓபிஎஸ்...!

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் கட்டிடம் கட்டுகிறார்கள். கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள் ஆனால் இந்துக்களை மட்டும் நிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேலும் திருப்பரங்குன்றம் விவகாரம் என்பது மதப் பிரச்சினை அல்ல அது முதல்வர் ஸ்டாலினின் ஈகோ பிரச்சனை என தெரிவித்தார். 

ஈரோடு பரப்புரையின் பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களத்தில் இல்லாதவர்கள் பற்றி பேச தேவை இல்லை என்று கூறியது தொடர்பான கேள்விக்கு, ஒருவேளை அவரைத்தான் அவரே குறிப்பிடுகிறாரோ? அவர்தான் களத்தில் இல்லை திடீரென காலத்திற்கு வருகிறார். திடீரென களத்திற்கு வருவதில்லை என சாடினார். அவர் எங்களை சொல்லவில்லை நாங்கள் பல்வேறு மாநிலங்களில்  ஆட்சியில் இருக்கிறோம் உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் இந்திய பிரதமர் தான் எங்களுக்கும் பிரதமராக வரவேண்டும் என கூறுகிறார்கள். தமிழ் நாட்டிலும் 18 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளோம். தேர்தலில் நிற்கிறோம். அப்படி இருக்கும் பொழுது களத்தில் இல்லை என்றால் அவரைத்தான் கூறுகிறாரோ என தெரிவித்தார். 

மஞ்சள் நகரம் என்று கண்டுபிடித்துள்ளார், ஆனால் மஞ்சளுக்கு தனி வாரியம் அமைத்துக் கொடுத்தது பாஜக. மஞ்சள் நகரத்தில் உள்ள ஒவ்வொருவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மஞ்சள் மாநகரத்தில் நின்று கொண்டு யாரும் எங்களை விமர்சிக்க முடியாது. பத்து வயதில் இருந்து நடித்துக் கொண்டிருக்க கூடிய உங்களுக்கே தமிழக மக்களிடம் அத்தனை இணைப்பு உள்ளது என்றால், 50 வருடங்களாக அரசியலில் உள்ள எங்களுக்கு எவ்வளவு இணைப்பு இருக்கும் என கேள்வி எழுப்பினார். நீங்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு இணைப்பை ஏற்படுத்தினீர்கள் ஆனால் நாங்கள் அப்படி இல்லை என தெரிவித்தார். விஜயின் திமுக எதிர்ப்பை நான் வரவேற்கிறேன், ஆனால் திமுக விற்கும் தவெகவிற்கும் போட்டி என்று எதை வைத்து கூறுகிறார்?. திமுக கூட்டணிக்கும் அதிமுக பாஜக கூட்டணிக்கும் தான் போட்டி என தெரிவித்தார். 

இதையும் படிங்க: “மாஸ்டரின் பிளாஸ்டர்”... விஜய்யின் ‘ஈரோடு’சபதம்.. 30 நிமிட பேச்சில் இதை எல்லாம் கவனிச்சீங்களா? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share